திரைத்துறையில் கமல்ஹாசனின் 64வது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் தனது 4 வயதில் திரை உலகில் நடிக்க தொடங்கியவர். இவர் இவர் நடித்த களத்தூர் கண்ணம்மா என்னும் முதல் படமே இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குடியரசுத் தலைவர் விருதை பெற்று தந்தது.

கமல்ஹாசன் கலைத்துறையில் பன்முக திறமைகளை உடையவர். அந்த வகையில் நடிப்பது மட்டுமல்லாமல், நடன ஆசிரியர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல துறைகளில் மேலோங்கி நிற்பவர். தற்போது அரசியல் வாழ்க்கையிலும் ஈடுபட்டுள்ளார். சினிமா வரலாற்றின் சிறந்த கலைஞன் ஆக திகழ்பவர். தமிழ் திரையுலகை உலக அளவில் கொண்டு சென்ற உலகநாயகன். அதுமட்டுமில்லாமல் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை தனது திரைப்படங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.இந்திய தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, கலை மாமணி விருது, பத்மபூஷன் விருது உள்ளிட்ட விருதுகள் இவரால் பெருமை அடைந்துள்ளன.
இந்நிலையில் இவர் திரைத்துறையில் நுழைந்து 64 ஆண்டுகள் நிறைவடைந்ததற்காக திரை உலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் இதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.…
— Kamal Haasan (@ikamalhaasan) August 12, 2023
இது குறித்த கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக”
என்று அனைவருக்கும் நன்றியை தெரிவித்து தனது எதிர்கால வாழ்க்கை மக்களுக்காக என்று பதிவிட்டுள்ளார்.