Homeசெய்திகள்சினிமாவெளியான ஒரு மாதத்திற்குள் ஓடிடிக்கு வரும் 'கங்குவா'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வெளியான ஒரு மாதத்திற்குள் ஓடிடிக்கு வரும் ‘கங்குவா’…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

கங்குவா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட படம் தான் கங்குவா.வெளியான ஒரு மாதத்திற்குள் ஓடிடிக்கு வரும் 'கங்குவா'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்க வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். பீரியாடிக் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் சூர்யா இரண்டு விதமான தோற்றங்களில் நடித்திருந்தார். பழங்குடியின மக்களில் ஒருவராகவும் ஸ்டைலிஷானா தோற்றத்திலும் நடித்திருந்தார் சூர்யா. மேலும் திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ், யோகி பாபு, கோவை சரளா, கருணாஸ், ரெடின் கிங்ஸ்லி, கே எஸ் ரவிக்குமார் ஆகிய பலரும் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தனர். வெளியான ஒரு மாதத்திற்குள் ஓடிடிக்கு வரும் 'கங்குவா'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் நெட்டிசன்கள் பலராலும் ட்ரோல் செய்யப்பட்டது. இந்தியன் 2 படத்தை போல் கங்குவா படத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த படம் திரைக்கு வந்து ஒரு மாதத்திற்குள் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதன்படி வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ