சூர்யாவின் 42 வது படமாக உருவாகியிருக்கும் கங்குவா வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்தில் சூர்யா இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.
சூர்யாவின் கேரியரில் இந்த படம் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு சூர்யா இந்த படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் படக் குழுவினர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மும்பை, டெல்லி போன்ற பல பகுதிகளில் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிலையில் அங்குள்ள ரசிகர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -