கங்குவா படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 42 வது படமாக கங்குவா எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். பீரியாடிக் ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா. இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நிலையில் பாபி தியோல், நட்டி நடராஜ் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். மேலும் நடிகர் கார்த்தியும் இந்த படத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‘வாமோஸ் பிரிங்கார் பேபி’ (YOLO) எனும் இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பாடலின் வரிகளை விவேகா எழுதி இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் லவிதா லோபோ ஆகிய இருவரும் இணைந்து பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகிய அனைத்திலும் பீரியாடிக் போர்ஷன் காட்டப்பட்டிருந்த நிலையில் இந்த பாடலில் நிகழ்காலத்தில் பிரான்சிஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யாவை காட்டியுள்ளனர். அதன்படி இந்த பாடல் சூர்யாவிற்கும் திஷா பதானிக்குமான காதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.