Homeசெய்திகள்சினிமாஅசத்தலான 'கார்த்தி 26' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..... டைட்டில் என்னன்னு தெரியுமா?

அசத்தலான ‘கார்த்தி 26’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….. டைட்டில் என்னன்னு தெரியுமா?

-

நடிகர் கார்த்தி கடைசியாக தனது 25வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அசத்தலான 'கார்த்தி 26' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..... டைட்டில் என்னன்னு தெரியுமா?இந்த படம் கார்த்தியின் 26வது படமாக உருவாகி இருக்கும் நிலையில் இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இதில் சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் உள்ளிட்டோர் கதாபாத்திரங்களை நடித்து வருகின்றனர். இந்த படம் ஆக்ஷன் கலந்த காதல் கதைகளத்தில் உருவாகி வருகிறது. இதில் நடிகர் கார்த்தி எம்ஜிஆரின் தீவிர ரசிகராக நடிக்கிறார். இந்த படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் பூஜை வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று நடிகர் கார்த்தி தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.அசத்தலான 'கார்த்தி 26' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..... டைட்டில் என்னன்னு தெரியுமா? இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதே சமயம் ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்துக்கு வா வாத்தியார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படமானது விரைவில் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ