Homeசெய்திகள்சினிமாநலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம்...... டைட்டில் குறித்த அப்டேட்!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம்…… டைட்டில் குறித்த அப்டேட்!

-

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கார்த்தி தனது 25வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வருகின்ற தீபாவளி முன்னிட்டு வெளியாகயிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

அதே சமயம் கார்த்தி தனது 26 வது படம் நடித்து வருகிறார். இந்த படத்தை சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன்
நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஒரு மசாலா படமாக உருவாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ராஜ்கிரன் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் ‘வா வாத்தியாரே’ என்பது இந்த படத்தின் டைட்டிலாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ