Homeசெய்திகள்சினிமாமீண்டும் போலீஸாக நடிக்கும் கார்த்தி..... எந்த படத்தில் தெரியுமா!

மீண்டும் போலீஸாக நடிக்கும் கார்த்தி….. எந்த படத்தில் தெரியுமா!

-

கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கியுள்ள ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து கார்த்தி தனது 26 வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தை சூது கவ்வும் படத்தில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கிருத்தி செட்டி நடிக்க, வில்லனாக சத்யராஜ் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதம் நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. மேலும் இந்த படத்திற்கு வா வாத்தியாரே என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கார்த்தி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்தி ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை உள்ளிட்ட படங்களில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ