கடந்த 2022-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தை இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்தது. ஜிபி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் சம்பந்தமான கதைக்களத்தில் அரசியல் பின்னணியை கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சர்தார் முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பி.எஸ். மித்ரனே இரண்டாம் பாகத்தை இயக்க உள்ள நிலையில், இப்படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக தெரிகிறது.