Homeசெய்திகள்சினிமாமெரி கிறிஸ்துமஸ் படக்குழு உற்சாகம்... ஒரே நேரத்தில் இரண்டு கொண்டாட்டம்...

மெரி கிறிஸ்துமஸ் படக்குழு உற்சாகம்… ஒரே நேரத்தில் இரண்டு கொண்டாட்டம்…

-

கோலிவுட் திரையுலகில் மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் ஹீரோ என்ற அந்தஸ்தில் உச்சம் தொட்ட நடிகர் விஜய் சேதுபதி தற்போது வில்லன் வேடங்களிலும் அசத்தி வருகிறார். முதன் முதலாக தமிழில் வில்லன் வேடத்தில் நடித்தார். இதை தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் குவிய தொடங்கின. அடுத்து தெலுங்கிலும் ஒரு படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கியன.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் அசத்திய விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். முதன் முதலாக மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அவர் நடித்திருந்தார். இதை தொடர்ந்து ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டி இருப்பார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு கிடைத்த வரவேற்பு அவரை பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக உயர்த்தி உள்ளது

விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்மஸ்'.....5 நாள் வசூல் எவ்வளவு?

விஜய் சேதுபதி நடிப்பில் ஹிந்தியில் தற்போது மெரி கிறிஸ்துமஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. திரைப்படத்தில் கத்ரினா கைஃப் நாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அதே சமயம் படக்குழுவினர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளையும் கேக் வெட்டி கொண்டாடி தீர்த்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

MUST READ