spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒரு நாயகன் உதயமாகிறான்... தமிழ் சினிமாவின் தங்கப் பிள்ளையாக உருவெடுக்கும் கவின்!

ஒரு நாயகன் உதயமாகிறான்… தமிழ் சினிமாவின் தங்கப் பிள்ளையாக உருவெடுக்கும் கவின்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவின் இளம் நாயகன் கவின் தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அவ்வளவு எளிதில் யாரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று விட முடியாது. அதுவும் இளம் வயதில். அப்படி குறிப்பிட்ட சிலரே மக்கள் மனதில் நிலைத்து நின்ற இளம் படிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.

we-r-hiring

அவர்களின் முக்கியமானவர் கவின். சின்னத்திரை மூலம் தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவருக்கு சீரியல் மூலமே பல ரசிகர்கள் உருவாகினர். பின்னர் வெள்ளித்திரையில் தோன்றினார். முதலில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டாலும்  அதையடுத்து வெளியான வெளியான படங்கள் எல்லாம் வரவேற்பு கொடுத்து அவரை தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

கவின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘டாடா’ திரைப்படம் நல்லா வரவேற்பு பெற்றது. தற்போது கவின் 4-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் புதிய படத்தில் கவின் நடித்து வருகிறார். படத்திற்கு ‘ஸ்டார்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தில் முதலில் ஹரிஷ் கல்யாண் நடித்து வந்தார். ஆனால் அவர் படத்தில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் இந்தப் படத்தில் கவின் இணைந்துள்ளார்.

நடன இயக்குனர் சதிஷ் இயக்கத்தில் கவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ‘அயோத்தி’ படத்தின் மூலம் மனம் கவர்ந்த ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இதையடுத்து விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் படத்திலும் கவின் தான் கதாநாயகனாக நடித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

அதையடுத்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திலும் கவின் நடிக்க இருக்கிறார். இவ்வாறாக பல அருமையான படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கவின்.

அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் நேரம் வந்துவிட்டது போல

MUST READ