Homeசெய்திகள்சினிமா'கலகலப்பு 3' படத்தில் நடிக்கும் கவின்...... மறுப்பு தெரிவித்த சுந்தர். சி?

‘கலகலப்பு 3’ படத்தில் நடிக்கும் கவின்…… மறுப்பு தெரிவித்த சுந்தர். சி?

-

பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர். சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.'கலகலப்பு 3' படத்தில் நடிக்கும் கவின்...... மறுப்பு தெரிவித்த சுந்தர். சி? இருப்பினும் ஒரு சில காரணங்களால் இப்படம் ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சுந்தர். சி கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு கலகலப்பு திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விமல், அஞ்சலி, ஓவியா, மிர்ச்சி சிவா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காமெடி கலந்த கதை களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஜீவா மற்றும் ஜெய் கூட்டணியில் கலகலப்பு 2 திரைப்படத்தை இயக்கியிருந்தார் சுந்தர்.சி.'கலகலப்பு 3' படத்தில் நடிக்கும் கவின்...... மறுப்பு தெரிவித்த சுந்தர். சி?

அதைத் தொடர்ந்து சுந்தர் சி, நடிகர் கவின் நடிப்பில் கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், கலகலப்பு 3 படத்தில் கவின் நடிப்பது குறித்து சுந்தர் சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அரண்மனை படத்தின் ரிலீசுக்கு பிறகு சுந்தர் சி கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்குவார் என்று நம்ம தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே படம் சம்பந்தமான அறிவிப்பு வெளியாகும் வரை படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ