Homeசெய்திகள்சினிமாவசூலை வாரிக்குவிக்கும் ஸ்டார்... ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தது...

வசூலை வாரிக்குவிக்கும் ஸ்டார்… ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தது…

-

கவின் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஸ்டார் படத்தின் ஓடிடி குறித்த அப்டேட் வௌியாகி உள்ளது.

லிப்ட், மற்றும் டாடா படங்களின் வெற்றி கவினுக்கு வெள்ளித்திரையில் படிக்கட்டுகளாய் மாறி இருக்கிறது. அவரது டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் தாமதமாக வெளியானாலும், வசூலிலும் வேட்டையாடியது. இதனால், கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி இருக்கின்றன. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளளின் ஸ்டார் திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார்.

ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஸ்டார் படம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வௌியாகும் என கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து படம் தாமதமானது. ஒரு வழியாக ஸ்டார் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. வசூலையும் குவித்து வருகிறது

இந்நிலையில் ஸ்டார் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வௌியாகி உள்ளது. அதன்படி, வரும் ஜூன் 14ஆம் தேதி அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ