கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.நடிகர் கவின் சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கி தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தார். அதே சமயம் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். அதன் பின்னர் தனது கடின உழைப்பினால் ஹீரோவாக உருவெடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் கவின் ஏற்கனவே லிப்ட், டாடா போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். அடுத்ததாக தமிழ் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் கடந்த மே 10 அன்று வெளியானது. இந்த படத்தை பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கியிருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.
இதில் கவின் உடன் இணைந்து லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன், ஆதிதி பொஹங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து ஓரளவிற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வந்தது. அதன்படி வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று (ஜூன் 7) வெளியாகியுள்ளது.
- Advertisement -