Homeசெய்திகள்சினிமாகயல் ஆனந்தி நடிப்பில் உருவாகும் 'மங்கை' ..... ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகும் ‘மங்கை’ ….. ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

நடிகை ஆனந்தி, முதலில் பஸ் ஸ்டாப் எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஆனந்தி கடந்த 2014 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதன் பின் அதை ஆண்டில் கயல் எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ஆனந்தி. எனவே இதன் பிறகு தான் ஆனந்தி, கயல் ஆனந்தி இன்று அழைக்கப்பட்டார். மேலும் இவர் சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றார். மேலும் ஒயிட் ரோஸ் எனும் சைக்காலஜிக்கல் திரில்லர் படத்திலும் நடித்து வருகிறார் கயல் ஆனந்தி.கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகும் 'மங்கை' ..... ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

இந்நிலையில் இவர், குபேந்திரன் காமாட்சி இயக்கும் மங்கை எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். ஜே எஸ் எம் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஸ்டார் என்பவர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தீசன் என்பவர் இசை அமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று காலை 10 மணி அளவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகும் 'மங்கை' ..... ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு! மேலும் இந்த ட்ரெய்லரை இயக்குனர் பா ரஞ்சித், விஜய் சேதுபதி மற்றும் நடிகர் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ