spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபடத்துல நான் கம்யூனிஸ்ட்டா நடிச்சிருக்கேன்… மாமன்னன் குறித்து கீர்த்தி சுரேஷ்!

படத்துல நான் கம்யூனிஸ்ட்டா நடிச்சிருக்கேன்… மாமன்னன் குறித்து கீர்த்தி சுரேஷ்!

-

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

இவர் ஜெயம் ரவியின் சைரன், ரகு தாத்தா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

we-r-hiring

அந்த வகையில் தற்போது இவர் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் உட்பட கமல், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், பா.ரஞ்சித் போன்ற கலந்து கொண்டனர்.

இவர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் “நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் மாமன்னன் படத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் நான் கம்யூனிஸ்ட்டாக நடித்திருக்கிறேன். இந்தப் படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும். உதயநிதி, வடிவேலுவுடன் நடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இவ்வளவு பெரிய டீமுடன் நடித்தது ஜாலியான பயணமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷிடம் திருமணம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கு கீர்த்தி சுரேஷ், “ஏங்க என்ன கல்யாணம் பண்ணி கொடுப்பதிலேயே இருக்கீங்க. எனக்கு கல்யாணம்னா நானே சொல்லுவேன்” என்று பதிலளித்துள்ளார். இந்த பதில் சமீபத்தில் வெளியான இவரின் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.

MUST READ