spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிரைவில் தொடங்கும் 'KH 237' படப்பிடிப்பு!

விரைவில் தொடங்கும் ‘KH 237’ படப்பிடிப்பு!

-

- Advertisement -

KH 237 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் தொடங்கும் 'KH 237' படப்பிடிப்பு!நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல வருடங்கள் கழித்து இவர்களது கூட்டணி இணைந்திருக்கும் நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படமானது 2025 ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன், அன்பறிவ் இயக்கத்தில் தன்னுடைய 237 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் தொடங்கும் 'KH 237' படப்பிடிப்பு!அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியானது. இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கிறார். மேலும் ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன் ஏஐ படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில் அவர் இந்தியா திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என செய்திகள் வெளியானது. விரைவில் தொடங்கும் 'KH 237' படப்பிடிப்பு!அந்த வகையில் தற்காலிகமாக KH 237 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ