- Advertisement -
கிங் ஆஃப் கொத்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்திருந்தார். இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ரித்திகா சிங், பிரசன்னா, அனிகா சுரேந்திரன், சபீர் கல்லாரக்கல் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை அபிலாஷ் ஜோசி இயக்கியிருந்தார். துல்கர் சல்மானின் பேப்பர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதனை தயாரித்திருந்தது. ஜேக்ஸ் பிஜாய் இதற்கு இசை அமைத்திருந்தார்.

கேங்ஸ்டர் கதை களத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.
தற்போது கிங் ஆப் கொத்தா திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.