Homeசெய்திகள்சினிமாகிஷன் தாஸ் நடிக்கும் 'தருணம்'..... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கிஷன் தாஸ் நடிக்கும் ‘தருணம்’….. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

கிஷன் தாஸ் நடிக்கும் தருணம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கிஷன் தாஸ் நடிக்கும் 'தருணம்'..... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல யூடியூபரான கிஷன் தாஸ் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அதே சமயம் இவர் தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கி தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவர் முதலும் நீ முடிவும் நீ எனும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதைத்தொடர்ந்து சிங்க் எனும் ஹாரர் திரில்லர் படத்திலும் நடித்திருந்தார். அடுத்தது இவரது நடிப்பில் தருணம் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை அருள்நிதியின் தேஜாவு பட இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கிஷன் தாஸுக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். ஜென் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தர்புகா சிவா இந்த படத்திற்கு இசையமைக்க ராஜா பட்டாசார்ஜி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கடந்த பல மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தில் இருந்து போஸ்டர்கள், பாடல்கள், டீசர், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கிஷன் தாஸ் நடிக்கும் 'தருணம்'..... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!இதற்கிடையில் இந்த படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடும் போட்டியின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

MUST READ