- Advertisement -
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் அறிமுகமாகி, தொடர்ந்து ரசிகர்களை தனது காமெடியால் கவர்ந்த நடிகர் கேபிஒய் பாலா. இதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பாலா மற்றும் புகழ் இருவருமே பிரபலம் அடைந்தனர். டைமிங் மற்றும் ரைமிங்கில் நகைச்சுவை செய்வதில் பாலாவுக்கு நிகர் பாலா மட்டும்தான். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாலா, வௌ்ளித்திரைக்கு வந்தும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சினிமாவைத் தாண்டி நடிகர் பாலா, பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளும் செய்து வருகிறார். முதலில் ஈரோடு அருகே உள்ள மலைக்கிராம மக்கள் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் அவதிப்படுவதை அறிந்த அவர், இலவசமாக அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கினார். அடுத்து சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார். தொடர்ந்து உதவி செய்து வரும் பாலா, தற்போது படிப்பை முடித்துவிட்டு வெளியே வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கி இருக்கிறார்.
Ellarukum intha manasu varaathu . This man is something special 🥺💯👌#Helpthepoor#Humanity #kpybala #MorningMotivation pic.twitter.com/84YHB1YZL2
— ×͜×ʀ ɪ o45 (@Im_Too_Excited) February 29, 2024