Homeசெய்திகள்சினிமாநடிகை குட்டி பத்மினியின் பிறந்ததின சிறப்பு பதிவு!

நடிகை குட்டி பத்மினியின் பிறந்ததின சிறப்பு பதிவு!

-

- Advertisement -

நடிகை குட்டி பத்மினியின் 67 வது பிறந்தநாள் இன்று.

1959 ஆம் ஆண்டு ‘ஆம்பள அஞ்சுலம்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இவர் தனது மூன்று வயதிலேயே நடிக்க தொடங்கி விட்டார்.
இவர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஜெய்சங்கர், ஜெயலலிதா, மனோரமா, நாகேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

we-r-hiring

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் சிறந்த ஆண் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல்ஹாசனுக்கு முதன் முறையாக தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. அவரை தொடர்ந்து இந்த விருது ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக இரட்டை வேடத்தில் நடித்த குட்டி பத்மினிக்கு வழங்கப்பட்டது. எனவே இவர் முதல் பெண் குழந்தை நட்சத்திர கவிஞர் ஆவார்.

இதைத்தொடர்ந்து இவர் பாசமலர், கப்பலோட்டிய தமிழன், நவராத்திரி, திருவருட்செல்வர், ஜல்லிக்கட்டு, என் கணவர், மல்லுவேட்டி மைனர், நம் நாடு, முதலாளி, அவளும் பெண்தானே, பெண்மணி அவள் கண்மணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் திருமால் பெருமை திரைப்படத்தில் ஆண்டாளாக நடித்திருந்த இவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

மேலும் “இவர் இளம் கன்று பயம் அறியாது” என்ற பழமொழிக்கேற்ப பாம்பு கொத்துகின்ற காட்சிகளிலும் சிங்கம், புலி போன்ற பயங்கரமான மிருகங்களுடன் இருக்கும் காட்சிகளிலும் நடித்துள்ளார். புலிக்குட்டியுடன் சிங்கத்தின் மேல் ஏறி சவாரி செய்யும் காட்சியில் நடித்ததற்காக இவருக்கு ஆந்திர அரசின் குழந்தை நட்சத்திர விருது கிடைத்தது.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 175 படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் இவரின் நடிப்பை பார்த்து வியந்த பெருந்தலைவர் காமராஜர் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பேச வைத்தார்.
சிறு வயதிலிருந்தே படத்தில் நடிக்க ஆரம்பித்ததால் சரியான கல்வி அறிவு கிடைக்காத இவர் சிறந்த பேச்சாளராகவும் மாறினார்.

இவர் தனது பதினைந்து வயதில் குச்சிப்புடி,கதக் நடனங்களை கற்றார்.

அதன் பின் நாடக மேடை ஏறிய இவர் மௌலி, ஒய் ஜி மகேந்திரன், எஸ் வி சேகர் உள்ளிட்டோருடன் இணைந்து பல நாடகங்களிலும் நடித்து வந்தார். அதற்காக சிறந்த நாடக நடிகருக்கான விருதை ஒவ்வொரு வருடமும் பெற்று வந்தார்.

தொடர்ந்து மேடை நாடகங்களிலேயே நடித்து வந்ததால் பட வாய்ப்புகள் பல தேடி வந்த போதிலும் அதனை தவறவிட்டார்.


இவ்வாறு படங்களில் நடிப்பதை இவர் கைவிட்டு இருந்தாலும் சின்னத்திரையில் இவர் கால் பதிக்க அது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.

அந்த வகையில் இவர் வைஷ்ணவி ஃபிலிம்ஸ் என்டர்பிரைசஸ் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளரும் ஆவார். இந்த நிறுவனத்தின் மூலம் பல தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறார்.
இவ்வாறு திரை உலகில் சிறு வயதில் இருந்தே சாதித்து வந்த இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராக இருக்கிறார்.

இவரின் பிறந்த நாளான இன்று இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வோம்.

MUST READ