spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநயன்தாரா நடிக்கும் புதிய படம்... சூப்பர் ஸ்டாரின் ஆசியுடன் தொடக்கம்!

நயன்தாரா நடிக்கும் புதிய படம்… சூப்பர் ஸ்டாரின் ஆசியுடன் தொடக்கம்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டாரின் ஆசியுடன் நயன்தாரா நடிக்கும் புதிய படம் துவங்கியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

we-r-hiring

இந்நிலையில் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் கதாநாயகியை மையமாகக் கொண்ட புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். அறிமுக இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜெய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யராஜும் படத்தில் இருக்கிறார். ராஜா ராணிக்குப் பிறகு நயன்தாரா, சத்யராஜ் மற்றும் ஜெய் கூட்டணி மீண்டும் ஜோடி சேருகிறது என்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரெடின் கிங்ஸ்லீ, ரேணுகா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசியுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. படக்குழுவினர் ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

MUST READ