Homeசெய்திகள்சினிமாரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.... 'லால் சலாம்' படத்தின் முக்கிய அறிவிப்பு!

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…. ‘லால் சலாம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

-

லால் சலாம் படத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முழுவதும் நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் லால் சலாம் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று 2 மணிக்கு வெளியாகும் என்று லைக்கா நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஏற்கனவே தலைவர் 170 படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. அதே சமயம் நான் சலாம் படத்தின் அறிவிப்பும் வெளியாக இருக்கிறது. ரஜினி ரசிகர்களுக்கு இந்த தகவல் டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

MUST READ