நஸ்ரியா – ஃபகத் தம்பதியை சந்தித்த நயன் – விக்கி ஜோடி
- Advertisement -
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். தனது கியூட் எக்ஸ்பிரெஷன் நடிப்பால் ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். தமிழில் ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.அதையடுத்து ஆர்யா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’, தனுஷுடன் நையாண்டி, ந, வாயை மூடிபேசவும் என சில படங்களில் நடித்தார். இத்திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நேரத்தில் நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஃபகத், மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, என தென்னிந்திய மொழிகளில் டாப் நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இந்த நட்சத்திர தம்பதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இருவரும் இணைந்து ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், மலையாள நட்சத்திர ஜோடியை கோலிவுட்டின் நட்சத்திர ஜோடி சந்தித்துள்ளது. அதன்படி, நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியினர், நஸ்ரியாவையும் ஃபகத் பாசிலையும் நேரில் சந்தித்து நேரம் கழித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.