Homeசெய்திகள்சினிமாதொடர்ந்து தள்ளிப்போகும் கவினின் 'கிஸ்'.... குழப்பத்தில் ரசிகர்கள்!

தொடர்ந்து தள்ளிப்போகும் கவினின் ‘கிஸ்’…. குழப்பத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

கவின் நடிப்பில் உருவாகும் கிஸ் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தொடர்ந்து தள்ளிப்போகும் கவினின் 'கிஸ்'.... குழப்பத்தில் ரசிகர்கள்!

சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கவின் தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் கவின், நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் கவின் உடன் இணைந்து ப்ரீத்தி அஸ்ராணி நடித்திருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்க ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.தொடர்ந்து தள்ளிப்போகும் கவினின் 'கிஸ்'.... குழப்பத்தில் ரசிகர்கள்!ரொமான்டிக் காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள், டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதே சமயம் இந்த படம் 2025 ஜூலை மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் ஜூலை மாதத்தில் திரைக்கு வரவில்லை. அதாவது இந்த படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமங்கள் விற்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.தொடர்ந்து தள்ளிப்போகும் கவினின் 'கிஸ்'.... குழப்பத்தில் ரசிகர்கள்! இந்நிலையில் தான் இப்படம் 2025 செப்டம்பர் 18ஆம் தேதி திரைக்கு வரும் என சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படம் தொழில்நுட்ப தாமதம் காரணமாக செப்டம்பர் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ