கைதி 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படம் வெளியானது. இந்த படம் லோகேஷ் கனகராஜுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தியை இந்த படத்தில் வேறொரு பரிமாணத்தில் காட்டி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. சாம்.சி. எஸ்- இன் இசை இப்படத்திற்கு பெரும் பக்க பலமாக அமைந்தது. அது மட்டுமில்லாமல் இப்படமானது, லோகேஷ் கனகராஜ் தொடங்கிய எல்சியு கான்செப்டின் முதல் படமாகும். இதன் பின்னர் லோகேஷ், எல்சியு – வின் கீழ் இயக்கிய ஒவ்வொரு படங்களிலும் கைதி படத்தின் ரெஃப்ரன்ஸ் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது ‘கூலி’ படத்தை முடித்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களாக கைதி 2 படத்திற்காக ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் கைதி 2 படத்தில் கார்த்தியும் (தில்லி), சூர்யாவும் (ரோலக்ஸ்) மோதும் காட்சியைக் காண ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். ஆனால் கைதி 2 படமானது தள்ளிப்போய்க் கொண்டே போகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் புதிய தகவல் என்னவென்றால், ஏற்கனவே வெளியான தகவலின் படி கைதி 2 திரைப்படம் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது. லோகேஷ் கனகராஜ், ‘கைதி 2’ படத்தில் பல புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது.