தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை அருண் மாதேஸ்வரன் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இது மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் மற்றும் ஜான் கொக்கேன் உள்ளிட்டோரின் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. விரைவில் இந்த படம் சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நடிகர்களும் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்து வருகின்றனர்.
- Advertisement -