Homeசெய்திகள்சினிமாஅங்க இங்கன்னு சொன்னாங்க... கடைசில சென்னை தானா?..... 'லியோ' இசை வெளியீட்டு விழா அப்டேட்!

அங்க இங்கன்னு சொன்னாங்க… கடைசில சென்னை தானா?….. ‘லியோ’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!

-

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருப்பதாக அப்டேட் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இவர்களின் கூட்டணி ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்
. இதில் விஜயுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல பிரபலங்களும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியானது. அதைத் தொடர்ந்து சஞ்சய் தத்தின் கிளிம்ஸ் மற்றும் அர்ஜுனன் கிளிம்ஸ் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில் இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருவதற்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என்று பல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் கிடைத்துள்ளன. அதுவும் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ