spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'லியோ' பட தெலுங்கு போஸ்டர் வெளியீடு!

‘லியோ’ பட தெலுங்கு போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள திரைப்படம் தான் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஆக்சன் கிங் அர்ஜுன் கௌதம் வாசுதேவ் மேனன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நான் ரெடி எனும் பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

we-r-hiring

அது மட்டும் இல்லாமல் லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் LCU விற்கு கீழ் வருமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் பெரிய அளவில் நிலவி வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சைமா விருது வழங்கும் விழாவில் இனி தொடர்ச்சியாக லியோ படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி இன்று லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி உள்ளது. ‘KEEP CALM AND AVOID THE BATTLE’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது அதிக அளவில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. புளியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ