லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மிஸ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த சில தினங்களாக படத்தின் போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் லியோ படத்தின் நான் ரெடி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லியோ படத்தின் படாஸ் எனும் செகண்ட் சிங்கள் நாளை வெளியாகும் என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். லியோ படத்தின் ஆடியோ லான்ச் இல்லை என்பதால் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகளை பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
