விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த வகையில் 627 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தாய்லாந்தில் முதற்கட்ட படப்பிடிப்புகளை நிறைவு செய்த தளபதி 68 படக்குழுவினர் சமீபத்தில் சென்னை திரும்பினர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார்.
தளபதி 68 படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, யோகி பாபு, மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், விடிவி கணேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.
மேலும் இந்த படத்தில் நடிகை இவானா இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கையாக இவானா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை இவானா பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான, மகேந்திர சிங் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்த எல் ஜி எம் திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை இவானா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.