மாதவன், கங்கனா ரனாவத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் மாதவன் தென்னிந்திய திரை உலகில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார். கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் மாதவன். அடுத்தது தி டெஸ்ட் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதே சமயம், கிரீடம், தெய்வத்திருமகள், தலைவா, மிஷன் சாப்டர் 1 உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான ஏ எல் விஜய் இயக்கத்தின் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார் மாதவன். அதன்படி இந்த படத்தில் மாதவன் உடன் இணைந்து நடிகை கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே மாதவன் மற்றும் கங்கனா ஆகிய இருவரும் இணைந்து தனு வெட்ஸ் மனு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இவர்கள் இணைந்துள்ள புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்திற்கு லைட் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.