தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நானி நடிப்பில் வெளியாகியுள்ள தசரா படத்தைப் பாராட்டியுள்ளார்.
நேச்சுரல் ஸ்டார் நானி தற்போது தெலுங்கு திரையுலகின் ஸ்டார் நடிகராக உருவெடுத்துள்ளார். அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தற்போது பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக் குவித்து வருகின்றன.
தற்போது நானி தசரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு, ‘தசரா’ படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
“தசரா திரைப்படம் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் மிக அற்புதமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். மகேஷ் பாபுவின் ட்வீட் ‘தசரா’ திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்ததுள்ளது.
மகேஷ் பாபுவின் ட்வீட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.