- Advertisement -
போச்சர் வெப் தொடரை பார்த்து மிரண்டுபோன நடிகர் மகேஷ்பாபு, படம் குறித்து சமூக வலைதளங்தளில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா காலத்திற்கு பிறகு திரைப்படங்களை காட்டிலும் வெப் தொடர்களின் எண்ணி்க்கை அதிகரித்துள்ளது. அதேபோல, வெப் தொடர்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. திரைப்படங்களுக்கு இருக்கும் சென்சார் பிரச்சனைகள் வெப் தொடர்களுக்கு இல்லாத காரணத்தால், ஒரு சில காட்சிகள் ராவாக காட்டப்படுகின்றன. சில சமயங்களில் இது பிரச்சனையை ஏற்படுத்தினாலும். சில சமயங்களில் அக்காட்சிகள் பாராட்டை பெறுகின்றன. அந்த வகையில் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வெப் தொடர் போச்சர்.
