Homeசெய்திகள்சினிமா'பிச்சைக்காரன்' படத்துல இந்த தெலுங்கு ஸ்டார் நடிச்சா நல்லாருக்கும்... விஜய் ஆண்டனி!

‘பிச்சைக்காரன்’ படத்துல இந்த தெலுங்கு ஸ்டார் நடிச்சா நல்லாருக்கும்… விஜய் ஆண்டனி!

-

- Advertisement -

“பிச்சைக்காரன் 2 பிரபல தெலுங்கு நடிகருக்கு பொருத்தமான கதை”

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருந்தார்.

அதையடுத்து தற்போது பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதி விஜய் ஆண்டனியே இயக்கியுள்ளார். காவியா தாபர், மன்சூர் அலிகான், விஜய் தேவ், ராதா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் யோகி பாபு நடித்துள்ள முன்னோட்டக் காட்சியை பட குழுவினர் சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.


மேலும் இப்படம் வரும் மே 19ஆம் தேதி திரைக்கு வரும் என்று செய்தி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனியிடம் செய்தியாளர்கள், “பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் தெலுங்கில் வேறு யார் நடித்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு விஜய் ஆண்டனி தன் கல்லூரி நண்பனான “மகேஷ்பாபு தான் இக்கதைக்கு பொருத்தமானவர் என்றும் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் நடித்தால் விஜய் ஆண்டனி இசையமைப்பதாகவும்” செய்தியாளர்களுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

MUST READ