spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகாதலனை கரம் பிடிக்கும் மாமன்னன் பட நடிகை!

காதலனை கரம் பிடிக்கும் மாமன்னன் பட நடிகை!

-

- Advertisement -
kadalkanni

உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். இந்த படத்தில் பகத் பாசிலின் மனைவியாக நடித்திருந்தவர் ரவீனா ரவி. காதலனை கரம் பிடிக்கும் மாமன்னன் பட நடிகை!இவர் முன்னணி டப்பிங் கலைஞராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார். ரவீனா ரவியின் தாயார் ஸ்ரீஜா ரவியும் முன்னணி டப்பிங் கலைஞர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரவீனா ரவி ஒரு கிடாயின் கருணை மனு, லவ் டுடே போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது காதலனை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி சமீபத்தில் மலையாள சினிமாவில் நாய்களை மையமாக வைத்து வாலாட்டி எனும் திரைப்படம் வெளியானது. தேவன் ஜெயக்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலு என்ற நாய்க்கு குரல் கொடுத்திருந்தார் ரவீனா ரவி. காதலனை கரம் பிடிக்கும் மாமன்னன் பட நடிகை!அந்த சமயத்தில் தேவன் ஜெயக்குமாருக்கும் ரவீனா ரவிக்கும் காதல் மலர்ந்த நிலையில் இருவரும் காதலித்து வருவதை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. இனிவரும் நாட்களில் இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் ரவீனா ரவி மற்றும் தேவன் ஜெயக்குமார் ஆகிய இருவருக்கும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ