spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரதீப் ரங்கநாதன் ஒரு ஆபத்தான.... மமிதா பைஜு பேட்டி!

பிரதீப் ரங்கநாதன் ஒரு ஆபத்தான…. மமிதா பைஜு பேட்டி!

-

- Advertisement -

மமிதா பைஜு, பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியுள்ளார்.பிரதீப் ரங்கநாதன் ஒரு ஆபத்தான.... மமிதா பைஜு பேட்டி!

நடிகை மமிதா பைஜு, மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர். இவர் தற்போது தமிழில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர், ஏற்கனவே ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ரெபல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் விஜயின் ஜனநாயகன், விஷ்ணு விஷாலின் இரண்டு வானம், சூர்யா 46, தனுஷின் D54 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் டியூட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் ஒரு ஆபத்தான.... மமிதா பைஜு பேட்டி!இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க கீர்த்திஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார். சாய் அபியங்கர் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஜாலியான என்டர்டெயினர் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 17, தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும் இதன் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரதீப் ரங்கநாதன் ஒரு ஆபத்தான.... மமிதா பைஜு பேட்டி!இந்நிலையில் மமிதா பைஜு, பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “பிரதீப் ரங்கநாதனை பார்க்கும்போது அமைதியாகவும், அப்பாவித்தனமாகவும் தெரியும். ஆனால் அவர் ஒரு கேடி மற்றும் ஆபத்தான புத்திசாலி” என்று தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக பிரதீப் ரங்கநாதன், “மமிதா என்னை ஆபத்தானவர் என்று சொல்வார். என்னுடைய 2 படங்களிலுமே நான் கெட்டவனாக இருந்து நல்லவனாக மாறி இருப்பேன். ஆனால் டியூட் படத்தில் நல்லவனாக மட்டும் தான் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ