Homeசெய்திகள்சினிமாமம்மூட்டியின் டர்போ படஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மம்மூட்டியின் டர்போ படஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

மம்மூட்டி நடிப்பில் உருவாகும் டர்போ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகரான மம்முட்டி பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகர் மம்முட்டி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.
அந்த வகையில் கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 24ஆம் தேதி காதல் தி கோர் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மம்முட்டி யாரும் ஏற்று நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அது மட்டும் இல்லாமல் இப்படம் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் பிரம்மயுகம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.மம்மூட்டியின் டர்போ பட பர்ஸ்ட் லுக் வெளியீடு!

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் திரைப்படத்தை இயக்கிய வியாஷக் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு டர்போ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஜஸ்டின் வர்கீஸ் இந்த படத்திற்கு இசையமைக்க மிதுன் மானுவேல் தாமஸ் இதற்கு கதை எழுதுயுள்ளார். மேலும் விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் டர்போ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று டர்போ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ