விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் வள்ளி மயில் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபல இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதேசமயம் செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிட்லர் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், விவேக் பிரசன்னா, சரண்ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, பிரியா அப்துல்லா, அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தாய் சரவணன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் அதிக பொருட்செலவில் வள்ளி திருமணம் நாடகத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான திரில்லர் ஜானரில் உருவாகி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
#ValliMayil Teaser will unveil on 28th November. Direction by @Dir_Susi
Produced by @ThaiSaravanan ‘s @NalluPictures banner @offBharathiraja #Sathyaraj @fariaabdullah2 #Sunil #RedinKingsly @immancomposer @editoranthony @saregamasouth @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/CpzCnuxNy4
— vijayantony (@vijayantony) November 26, 2023
வள்ளி மயில் திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நவம்பர் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.