மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
நடிகர் மணிகண்டன் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதை தொடர்ந்து இவர் ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படம் நல்ல ஒரு பீல் குட் படமாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அடுத்தது லவ்வர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் மணிகண்டன். இந்த படமும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி கண்டது. இதற்கிடையில் மணிகண்டன் மத்தகம் எனும் வெப்தொடரில் வில்லனாக நடித்திருந்தாலும் இது எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அடுத்ததாக மணிகண்டன் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூட்யூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இதனை சினிமாக்காரன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. வைஷாக் இந்த படத்திற்கு இசையமைக்க சுஜித் சுப்பிரமணியம் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் இந்த படத்திற்கு குடும்பஸ்தன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படக்குழுவினர் இந்த படமானது விரைவில் திரைக்கு வரும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.