பைசன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் துருவ் விக்ரமின் 3வது படமாகும். இந்த படத்தினை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனமும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொடர் வெற்றி படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.