மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
மார்க் ஆண்டனி படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி இறைவன் மற்றும் சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்கள் வெளியான போதிலும் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் குறையவே இல்லை. இந்நிலையில் இந்த படம் 101 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.