Homeசெய்திகள்சினிமாவிஷால், எஸ் ஜே சூர்யா கூட்டணியின் 'மார்க் ஆண்டனி'.... ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஷால், எஸ் ஜே சூர்யா கூட்டணியின் ‘மார்க் ஆண்டனி’…. ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

மார்க் ஆண்டனி படத்தில் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா கூட்டணியில் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். இதில் விஷால் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மார்க் ஆண்டனி படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் செல்வ ராகவன், ரித்துவர்மா, அபிநயா, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்த படத்தில் முதல் மூன்று பாடல்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வருகின்ற (செப்டம்பர் 3) நாளை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ