Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் ரீமேக் ஆகியுள்ள யோகிபாபுவின் 'மண்டேலா'... ஹீரோ யார் தெரியுமா!?

தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ள யோகிபாபுவின் ‘மண்டேலா’… ஹீரோ யார் தெரியுமா!?

-

- Advertisement -

கடந்த 2021 ஆம் ஆண்டு யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா. இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. யோகி பாபுவிற்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த படத்தை தெலுங்கில் ‘மார்ட்டின் லூதர் கிங்’ எனும் பெயரில் புஜா கொல்லுரு ரீமேக் செய்துள்ளார். இதில் தெலுங்கு நடிகர் சம்பூர்ணேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படம் வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் மண்டேலா படத்திற்கு கிடைத்த வரவேற்பை போல் தெலுங்கு ரீமேக்கான மார்ட்டின் லூதர் கிங் திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ