மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு தணிக்கைகுழுவின் சான்றிதழ்
- Advertisement -
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ரோமியோ. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த திரைப்படம் மழை பிடிக்காத மனிதன்.
இத்திரைப்படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியும் இருக்கிறார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது. படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, சரத்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா, தலைவாசல் விஜய், ப்ருத்வி அம்பர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய் ஆகியோர் படத்திற்கு இசை அமைத்தனர்.
மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஒவ்வொன்றாக வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் படத்திற்கு யுஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கி இருக்கிறது. இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது