- Advertisement -
விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்தி உச்ச நட்சத்திரமாக உயர்ந்து இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழில் கொடி நாட்டிய அவர் தற்போது தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அசத்தி வருகிறார். இதையடுத்து மும்பை கர் அதாவது மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகினார் விஜய் சேதுபதி. இருப்பினும் அப்படம் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. இயைடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் பாலிவுட் ஜாம்பவானுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் ஹிந்தி திரையுலகில் தனக்கான இடத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் விஜய் சேதுபதி.
