spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅனுஷ்காவின் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

அனுஷ்கா பாகுபலி நிசப்தம் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார். இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க மகேஷ் பாபு இயக்கியுள்ளார். ரதன் இசையமைத்துள்ளார்.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் பொலி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.உணவை மையமாக கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. அனுஷ்கா இதில் சமையல் கலைஞராக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்த நிலையில் இப்படம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

we-r-hiring

ஆனால் ஒரு சில காரணங்களால் ஏற்படும் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ