Homeசெய்திகள்சினிமாஅம்பானி வீட்டு கல்யாணத்தில் பாடி, நடனமாடிய நட்சத்திரங்கள்... கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்த அம்பானி...

அம்பானி வீட்டு கல்யாணத்தில் பாடி, நடனமாடிய நட்சத்திரங்கள்… கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்த அம்பானி…

-

இந்தியாவின் முதல் பணக்காரரும், ஆசியாவின் பணக்காரப் பட்டியலில் இடம்பெற்றவருமான முகேஷ் அம்பானி, மாபெரும் தொழில் அதிபரும் கூட. இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில், கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழில் அதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ambani ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமண நிச்சயம் நடைபெற்று முடிந்தது. நிச்சய நிகழ்ச்சியே வெகு விமரிசையாக கோலாகலமாக நடைபெற்றது

இருவரின் திருமணமும் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், ஜாம் நகரில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர்.

இது தவிர நிகழ்ச்சியில் பாடுவதற்காக ஹாலிவுட்டிலிருந்து ரிஹானாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். அவருக்கு மட்டும் 170 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி கொண்டாட்டத்தில் திளைத்த பாலிவுட் நடிகர்கள் கத்ரினா கைஃப், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், தீபிகா படுகோன், அலியா பட் உள்பட பல நட்சத்திரங்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை அம்பானி வழங்கி இருக்கிறாராம்.

MUST READ