spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகஜினி படத்தில் நடித்தது மோசமான முடிவு... நடிகை நயன்தாரா வருத்தம்...

கஜினி படத்தில் நடித்தது மோசமான முடிவு… நடிகை நயன்தாரா வருத்தம்…

-

- Advertisement -
 
கோலிவுட்டின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கஜினி. இப்படத்தில் சூர்யா நாயகனாக நடித்திருந்தார். மேலும், அசின் மற்றும் நயன்தாரா இருவரும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தனர். அமிசியா வால் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலதிபர் தன் காதலியின் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை அம்சம் கொண்ட திரைப்படம் இது.
இத்திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது இத்திரைப்படத்தின் பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. இன்று வரை கஜினி திரைப்படம் பெரிதளவில் பேசப்படும். கஜினி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்திரைப்படம் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இத்திரைப்படம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ரி ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கஜினி திரைப்படத்தில் நடித்தது தான் எடுத்த மிக மோசமான முடிவு என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். கஜினி படத்தில் தனது கதாபாத்திரம் திட்டமிட்டபடி படமாக்கப்படவில்லை என்றும், அதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது என்றும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தனக்கு ஒரு பாடம் என்றும் நயன்தாரா தெரிவித்தார்.

MUST READ