வெறித்தனமாக நடித்துள்ள ஃபகத்… நடிகை நயன்தாரா பாராட்டு…
- Advertisement -
ஆவேஷம் திரைப்படத்தை கண்டு ரசித்த நடிகை நயன்தாரா, படத்தில் நடித்திருக்கும் ஃபகத் ஃபாசிலுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் ஃபாசில். அவர் மோலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மாறுபட்ட வேடங்களை தேர்வு செய்து கச்சிதமாக நடிப்பதில் ஃபகத் கை தேர்ந்தவர். ஹீரோ வேடத்தில் மட்டுமன்றி மலையாளத்தில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.

இதைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இறுதியாக ஃபகத் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் சாதி வெறி பிடித்த ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார். இதைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஆவேஷம். ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆவேஷம்.

கடந்த 11-ம் தேதி வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமன்றி திரை நட்சத்திரங்களும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். வசூல் ரீதியாகவும் படம் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் சமந்தா, விக்னேஷ் சிவன் இருவரும் படத்தை பாராட்டினர். இதைத் தொடர்ந்து நடிகை நயன்தாராவும் ஆவேஷம் திரைப்படத்தை பாராட்டி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ஃபகத். என்ன ஒரு வெறித்தனமான நடிப்பு, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன் என புகழாரம் சூட்டியிருக்கிறார்.