spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபொங்கலுக்கு வெளியாகும் மற்றுமொரு புதிய படம்..... 'நேசிப்பாயா' படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

பொங்கலுக்கு வெளியாகும் மற்றுமொரு புதிய படம்….. ‘நேசிப்பாயா’ படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

-

- Advertisement -

விஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நேசிப்பாயா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கலுக்கு வெளியாகும் மற்றுமொரு புதிய படம்..... 'நேசிப்பாயா' படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

நடிகர் அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஷ்ணுவரதன். இவர் அடுத்ததாக மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு நேசிப்பாயா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சரத்குமார், குஷ்பூ, பிரபு, ராஜா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாக்கி இருக்கும் இந்த படத்தினை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கேமரான் எரிக் பிரிசன் இந்த படத்தின் ஒளிப்பதிவுப் பணிகளை கவனிக்கிறார். பொங்கலுக்கு வெளியாகும் மற்றுமொரு புதிய படம்..... 'நேசிப்பாயா' படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதேசமயம் இந்த படத்தின் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படமானது வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தன்று திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

ஏற்கனவே பொங்கல் தினத்தை முன்னிட்டு வணங்கான், கேம் சேஞ்சர், தருணம், மெட்ராஸ்காரன் போன்ற எக்கச்சக்கமான படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ